எனது மகனை மிகமோசமாக விமர்சனம் செய்ய வேண்டாம் என வானொலி நிலையத்திற்கு தொலைபேசியூடாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்ட்ரோகின் தாய் பேசியதை குறித்த வானொலி நிலையம் நேரடியாக ஒலிபரப்பிய சம்பவம் ஒன்று நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து குறித்த வானொலி நிலையத்தில் கடமையிலிருந்த இரு வானொலி அறிவிப்பாளர்களையும் அந்த நிறுவனம் வேலை நிறுத்தம் செய்துள்ளது.
உலகக் கிண்ண இருபதுக்கு - 20 இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதின.
இறுதிப்போட்டியின் இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தால் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. அந்த நிலையில், பந்து வீச வந்த பென் ஸ்ட்ரோக் தனது முதல் 4 பந்துகளிலும் சிக்சர்களை வழங்கி, இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
இதுகுறித்து நியூசிலாந்திலுள்ள பிரபல வானொலி அலைவரிசையொன்றின் இரு அறிவிப்பாளர்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.
குறித்த அறிவிப்பை செவிமடுத்துக்கொண்டிருந்த நியூசிலாந்தில் வசித்து வருபவரான பென் ஸ்ட்ரோக்ஸின் தாய் டிபோரா, வானொலி நிலையத்திற்கு தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டார்.
தான் கூறும் கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துமாறு வானொலி அறிவிப்பாளர் இருவரிடமும் உறுதி வாங்கியபடி பேச ஆரம்பித்தார் ஸ்ட்ரோக்ஸின் தாயார் டிபோரா.
"எனது மகன் நியூசிலாந்தை பூர்வீகமாக கொண்டவர். 12 வயது வரை நியூசிலாந்தில் வளர்ந்தவர் என்பது வானொலி நேயர்கள் எத்தனை பேருக்கு தெரியும்? தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இப்படி ஒரு விளையாட்டில் நெருக்கடியான நிலையை சந்தித்திருந்தால் இப்படியான வானொலி நிகழ்ச்சியை கேட்டு ரசிப்பார்களா? என்று தாயார் கேள்வி எழுப்பினார்.
ஆனால், அந்த இரு வானொலி அறிவிப்பாளர்களும் தாயின் கதறலை அப்படியே நேரடியாக வானலையில் ஒலிபரப்பிவிட்டனர்.
இதையடுத்து குறித்த வானொலி அறிவிப்பாளர்கள் இருவரையும் நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM