(ஆர்.யசி)

பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தாலும் கூட மக்கள் நலன் சார்ந்தும், பொருளாதார சுமைகளில் இருந்து மக்கள் விடுபடக்கூடியதுமான வரவு செலவு திட்டம் ஒன்றினையே அரசாங்கம் இம்முறை  முன்வைக்கும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர், விவசாயிகள் நலன்களில் இம்முறை அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அடுத்த மாதம் அரசாங்கத்தின் முழுமையான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவு திட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.