இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற நளினி மற்றும் முருகன் ஆகியோர் தொடர்ச்சியாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரையும் விடுவிப்பதற்கான தீர்மானத்தை ஆளுநர் மேற்கொள்ள முடியும் என்று இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

எனினும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் தீர்மானம் தாமதித்து வருகின்ற நிலையில், தங்களது விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரி அவர்கள் இருவரும் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நளினியின் கணவரான முருகன், வேலூர் ஆண்கள் சிறையில் கடந்த 2ஆம் திகதி முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

அவருக்கு ஆதரவாக நளினி கடந்த சனிக்கிழமை முதல் உணவுத் தவிர்ப்பை ஆரம்பித்து முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.