பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த கோரியும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினை அம்சங்களை செய்து கொடுக்க வேண்டும் என கோரியும் மலையக இளைஞர்கள் அமைப்பு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது. 

அந்தவகையில் இன்று டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினை அம்சங்களை செய்து கொடுக்க வேண்டும் என கோரியே, மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும், தோட்டங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மக்கள் மகஜர் ஒன்றை தயாரித்து சேகரிக்கப்படும் கையெழுத்துக்களையும் இணைத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர், இந்திய உயர்ஸ்தானிகர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.