(இராஜதுரை ஹஷான்)

போலியான எரிபொருள் விலை சூத்திரத்தை மையப்படுத்தி நடுத்தர மக்களின்  வாழ்க்கை செலவுகளை அதிகரிக்க வேண்டாம். ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கையாக முறையற்ற வரி அறிவிடல், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவை மாத்திரமே காணப்படுகின்றது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

வஜிராஷரம விகாரையில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட பொழுது பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ எரிபொருட்களின் விலையினை 15 ரூபாவிற்கு குறைத்து போலியான எரிபொருள் விலை சூத்திரத்தையும் முழுமையாக இரத்து செய்தார்.

அதனை தொடர்ந்து  ஏனைய அத்தியாவசிய பொருட்களின்  விலைகளும் சடுதியாக குறைக்கப்பட்டது.  

எனினும் 52 நாட்கள்  நாட்டு மக்கள் சற்று திருப்திடைந்தார்கள் என்றே குறிப்பிட வேண்டும்.