டுபாயிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்ததாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார். 

இவர்களிடமிருந்து 148 பெட்டிகளில் 29,600 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி 16,28,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பான விசாரணைகளையும் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.