(இராஜதுரை ஹஷான்)

இலவச கல்வியினை தனியார் மயமாக்கி  நடுத்தர  மக்களின் கல்வி நிலையினை பாதிக்கும்  செயற்பாடுகளை இன்று கல்வி அமைச்சு முன்னெடுக்கின்றது. இதுரை காலமும் இலவச கல்விக்கு தனியார் துறை எவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது  என்பதை ஆதார பூர்வமாக குறிப்பிட முடியும் . இச்சவாலை எதிர்கொள்ள கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தயாரா என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கேள்வியெழுப்பினார்.

வஜிராஷரம விகாரையில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

அரச அங்கிகாரம் பெற்றுள்ள தனியார் பாடசாலைகளின் கிளை பாடசாலைகளை நாடுதழுவிய ரீதியில் ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்துள்ளமையானது இலவச கல்விக்கு எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும்.இவ்விடயத்தில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.