(செய்திப்பிரிவு)

நாட்டின் வேறுப்பட்ட சிலப்பகுதிகளில் இடம்பெற்றுள்ள வாகன விபத்துக்களில் ஐவர் பலியாகியுள்ளதுடன்,ஒரு வயது எட்டு மாதமேயான குழந்தை யொன்றும் சிகிச்சைப் பெற்று வருகின்றது. நேற்று குறித்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பென்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில்  முற்பகல் 10.20 மணியளவில் காலி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பாதசாரதி பெண்ணொருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில்,பெண் உயிரிழந்துள்ளார்.

கோம்மல - பென்தொட்ட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய  பெண்ணே இவ்வாறு உயிரிந்துள்ளதுடன்,விபத்து தொடர்பில் பொலிசார் மோட்டார் சைக்கிளின் சாரதியை கைது செய்துள்ளனர்.

அதேவேளை மீகமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகமுவை - கெலிசன் மாவத்தையில் முற்பகல் 11.5 மணியளவில் மோட்டார் சைக்கிள் பாதசாரதி பெண்ணொருவரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண் உயிரிழந்தள்ளார்.

மீகமுவை - கேலிகஸ்பார பகுதியைச்சேர்ந்த 71 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரி - பாணதரை வீதியின் பிரதேச செயலாளர் காரியாலயத்தின் முன்னால் முற்பகல் 11. 45 மணியளவில் பாணதுரையை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி பாதசாரதி ஒருவரின் மீது மோதிய விபத்தில் பாதசாரதி உயிரிழந்துள்ளார்.

பஹலகம - எல்லவள பகுதியைச்சேர்ந்த 66 வயதுடையர் உயிரிழந்துள்ளதுடன்,விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அன்றய தினமே பிற்பகல் 2 மணியளவில் அங்குருவாதொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரணை - அங்குராந்தொட வீதியின் வெலிகெடல்ல சந்தியில் ,அங்குராங்தொடயை நோக்கி சென்றுக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி , சாரதி கண்ணயர்ந்ததின் காரணமாக,முச்சக்கர வண்டி பாதையின் எதிர் திசைக்கு வீசப்பட்டு மின்கம்னத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் சாரதியுடன் அவரது மணைவியும்,ஒரு வயது 8 மாதமேயான அவரது குழந்தையும் பயணித்துள்ளதுடன் விபத்தின் போது பலத்த காயமடைந்த நிலையில் இவர்கள் மூவரும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,சாரதியின் மணைவி  இதன்போது உயிரிழந்துள்ளார்.விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வெலிகெடெல்ல - ஹொரணை பகுதியைச் சேர்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதேவேளை நிட்டமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேயான் கொட வீதியின், உதம்மிட்ட பகுதியில் அரச பஸ்சொன்று நிறுத்தப்பட்ட போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பஸ்சுடன் மோதி எதிர்திசைக்கு வீசப்பட்டு வேன் வாகனமொன்றுடன் மீண்டும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளார். 

வெத்தகம - பஸ்யால பகுதியைச் சேர்ந்த 20 வயதடைய இளைஞன் இவ்வாறு உயிரிழந்தள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ் வண்டியின் சாரதியையும்,வேன் வாகனத்தின் சாரதியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேற்படி விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.