பிரான்ஸின் பரிஸ் நகரில் நடைபெற்ற பாரம்பரிய கராத்தே சுற்றுப்போட்டியில் சோட்டோக்கான் கராத்தே அக்கடமி பிரான்ஸ் கழக மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

 இவர்களுக்கு முதலாம் இடத்திற்கு 32 பதக்கங்கள் 2ஆம் இடம் 34 பதக்கங்கள், 3ஆம் 45 பதக்கங்கள் என மொத்தமாக 111 பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

 இவர்களுக்கான பயிற்சிகளை எஸ்.கே.ஏ.எப் பிரான்ஸ் கழக பிரதம பயிற்றுநர்  ன்செய்.கே.அப்பன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.