இங்கிரிய பகுதியில் 4 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓரும, கதானபிடிய பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இங்கிரியை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இந்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஸ்ஹந்திய - இரகாவில பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனிடமிருந்து 2 கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும்,

அரகாவில - ஹதபான்கொட பகுதியைச் சேர்ந்த அதே வயதுடைய மற்றுமொரு இளைஞனிடமிருந்து, 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெறோயின் போதைப் பொருளும் பொலிசாரால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இங்கிரியை பொலிசார்  இன்றைய தினம் சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன்,மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.