தென்னாபிரிக்காவிற்கான தொடரிலிருந்து தினேஸ் சந்திமல் நீக்கப்பட்ட செய்தியை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளா சண்டிக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்

கிறிக்கின்போவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தினேஸ் சந்திமலை நீக்குவது குறித்து எனக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை,விமானத்தில் ஏறிய பின்னரே நான் இதனை அறிந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா போன்ற தொடர்களில் அனுபவம் மிக்க வீரர்கள் எங்களிற்கு அவசியம்,இங்குள்ள சூழலில் அனுபவம் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

தென்னாபிரிக்காவில் இதற்கு முன்னர் நீங்கள் விளையாடியிராவிட்டால் நீங்கள் கடும் சவாலை எதிர்கொள்வீர்கள் எனவும் ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்

மைதானத்திற்கு வெளியே நிகழும் விடயங்கள் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன எனவும் ஹதுருசிங்க  தெரிவித்துள்ளார்

ஐசிசியின் ஆட்ட நிர்ணயசதி குற்றச்சாட்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் நவம்பரில் தெரிவுக்குழுவினர் மாற்றப்பட்டனர் தெரிவுக்குழுவினர் மாற்றப்பட்டவுடன் தலைமைத்துவமும் மாற்றமடைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் பயிற்றுவிப்பாளர்களும் மாற்றப்பட்டனர்,அதுவும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வீரர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளானார்கள் யாரிடம் ஆலோசனை பெறுவது என தெரியாத நிலையில் அவர்கள் காணப்பட்டனர் எனவும் ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.