யாழ்ப்பாணம், நெடுந்தீவு வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 9 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மீனவர்களை   ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.