இலங்கை விமானப் படைக்கு எம்.ஐ.17 உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்வது குறித்து ரஷ்யாவுடன், இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தகளை நடத்தி வருகிறது.

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக இந்த தகவலை ரஷ்ய நாளிதழான ஸ்புட்னிக்கிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐ.நா.அமைதிப்படையின் பணிகளுக்காக ரஷ்யாவிடம் எம்.ஐ.17 உலங்குவானூர்திகளை வாங்குவது குறித்து குழுவொன்றை கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.