உலக முடிவிற்கு உரித்தான பொகவந்தலாவ மஹஎலிய வனப்பகுதியில். மரை ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்க முச்சக்கர வண்டி மூலம் கொண்டு வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு பொகவந்தலாவ பொலிஸார் கைது

செய்துள்ளதாக பொகவந்தலாவரூபவ் பொலிஸ் அதிகாரி கே.ஸ்ரீ தர்மபிரிய கூறினார்.

மேலும் இந்த இரண்டு சந்தேக நபர்களும் இந்த வனப்பகுதியில் வைத்து வேட்டையாடிய மரை இறைச்சியை விற்ற பின்னர் எஞ்சியதை விற்பனைக்காக முச்சக்கர வண்டியில் கொண்டு வந்த போது கிடைக்கபெற்ற தகவலின்படி பொலிஸார் அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

 இதில் மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியதை தொடர்ந்து பொலிஸார் சுற்றிவளைப்பில் அவரை கைதுசெய்துள்ளனர். 

சந்தேக நபர்கள் மூவரையும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதோடு சந்தேக நபர் மூவரும் பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.