எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்றி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் 6 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 5 ரூபாவினாலும் ஒட்டோ டீசல் 4 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 123 ரூபாவாகவிருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 128 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 147 ரூபாவிலிருந்து 152 ரூபாவாகவும், 99 ரூபாவாகவிருந்த ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 103 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 118 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 126 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.