புதிய அமைச்சை பொறுப்பேற்று மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஸ்ணன்  இன்று மாலை 4.30 மணியளவில் மஸ்கெலியா  சாமிமலை வீதியில் உள்ள அச்சனிக்கா மண்டப கேட்போர் கூடத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

அவர் அங்கு உரையாற்றும் போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனத்தை 140ரூபாவால் உயர்த்த அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். அரசு அதனை ஏற்று செயற்பட வேண்டும். அத்தோடு ஒப்பந்தம் செய்த கம்பனிகார்களிடம் நாம் 140 ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு அதிகரித்து தருமாறு கேட்ட போது அவர்கள் அதனை மறுத்து விட்டனர்.

இருந்தபோதும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000ரூபாவை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுகொடுக்க வேண்டும் என்றார். அத்தோடு மஸ்கெலியா பிரதேச சபை நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் மலையக பகுதியில் வீதிகள் செப்பனிடப்படவில்லை. இது அரசாங்கம் எம்மை கண்டுக்கொள்ளாத நிலையாகும். ஹட்டன், மஸ்கெலியா . பொகவந்தலாவ, நோர்வுட், மஸ்கெலியா நல்லதண்ணி, மஸ்கெலியா சாமிமலை, மஸ்கெலியா நோட்டன் வீதி கினிகத்தேன மற்றும் தலவாகல, டயகம போன்ற வீதிகள் குன்றும் குழியுமாக உள்ளது. 

மாற்றும் தாய்மனப்பான்மையில் அரசு இன்று நம்மை நடத்துகின்றது. எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் எமக்கு நிரந்தர சம்பளத்தையும், விதிகளை செப்பனிடாவிடத்து நாம் அரசாங்கத்தை ஓரம் கட்ட தயார் என்று கருத்து தெரிவித்தார்