கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினரால் கரடி போக்குச் சந்திக்கருகில் வழங்கப்பட்ட வியாபார நிலையங்கள் தொடர்பில் பொது மக்கள் சிலர் இன்று (11) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

இன்று முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் கூடிய சிலர் கரைச்சி பிரதேச சபைக்குரிய காணியை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாக  வசதிப் படைத்தவர்களுக்கு வியாபார நிலையம் அமைப்பதற்கு வழங்கி விட்டார் என்றும், கிளிநொச்சி ஏ9 வீதியில் கரடி போக்குச் சந்தியில் அமைந்துள்ள பெறுமதிமிக்க காணிகளையே இவ்வாறு வழங்கியுள்ளார் என்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர்கள். 

தமது கிராமத்தில் உள்ள காணியை கிராம மக்களின்  வாழ்வாதார தேவைகள் அல்லது பொது தேவைகளுக்கு வழங்குவதாக தெரிவித்து வந்த நிலையில் தீடிரென ஐந்து தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டவர்கள் கிளிநொச்சி நகரில் பிரிதொரு இடத்தில் தற்போது வியாபாரம் நடத்தி வருகின்றவர்கள் எனத் தெரிவித்த அவர்கள்,

சபையானது இவ்வாறு வியாபார நிலையங்களை  வழங்குவதாயின் சபையின் அனுமதி, பெறப்பட்டு, பத்திரிகைகளில்  கேள்விக் கோரல் விடப்பட்டு வழங்கியிருக்க வேண்டும்   ஆனால் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனத் குற்றம் சுமத்திய அவர்கள்.  

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர்  ஊடகங்களுக்கு குறிப்பிடும் போது பாதிக்கப்பட்டவர்களுக்குதான் கடைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆனால் உண்மையில் பணக்காரர்களுக்கே கடைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவும் எதிர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் குற்றம் சுமத்தினார்கள்