(ஆர்.விதுஷா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள  அதிகரிப்பை வலியுறுத்தி எதிர்வரும் 17 ஆம் திகதி ஹட்டனிலும், 24 ஆம் திகதி தலவாக்கலையிலும் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக 1000 ரூபா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

இலங்கை தோட்ட சேவையாளர்கள் சங்கத்தில் இன்று இடம்பெற்ற     ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே 1000 ரூபாய் இயக்கத்தினரால் மேற்கண்டாறு குறிப்பிட்டப்பட்டது. 

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய்   பெற்றுத்தரக்கோரி  தொடர்போராட்டங்கள்   முன்னெடுக்கப்பட்ட போதிலும் இறுதியில் தொழிற்சங்கவாதிகளால் வெறுமனே 20 ருபாய் சம்பள உயர்வை  மாத்திரமே பெற்றுக்கொடுக்க முடிந்தமை கவலையளிப்பதாகவும் அந்த அமைப்பு இதன்போது சுட்டிக்காட்டியது.