அமரர் சந்திரசேகரன் ஞாபகார்த்தமாக ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளை நடத்தும் அணிக்கு ஆறு பேர் கொண்ட சந்திரசேகரன் ஞாபகார்த்த (சி.பி.எல் சிக்ஸ்ஸர்ஸ்) கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெறவிருக்கும் இக்கிண்ணத்தில் பங்குபற்ற விரும்பும் தமது அணிகளை 076-2425124 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு விண்ணப்பப் படிவங்களை பெற்று முன்பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கிண்ணத்திற்கு அணிகளுக்கான அனுமதிக் கட்டணமாக 2000 ரூபாய் அறவிடப்படும் அதேவேளை, முதலாம் இடத்தை பெற்றுக்கொள்ளும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.