அரலகங்வில பகுதியில் நீரில்மூழ்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மல்தென பகுதியில்  நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் குழந்தையொன்று கால்வாய் நீரில்மூழ்கி, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

உள்பத்வௌ ரூஹூனுகம பகுதியைச்சேர்ந்த 2 வயது 3 மாதமேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.