சூடானில்  ஹெலிகொப்டர் விபத்து :இராணுவ வீரர்கள் 3 பேர் பலி

Published By: R. Kalaichelvan

11 Feb, 2019 | 04:45 PM
image

ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று, சூடானில் ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகித்து செயல்பட்டுக்கொண்டிருந்தது.

குறித்த ஹெலிகொப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடுக்லி நகரத்தில் இருந்து எல்லையோரம் உள்ள அப்யெய் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது.

ஹெலிகொப்டர் , ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை வளாகத்தினுள் நேற்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அந்த ஹெலிகொப்டரின் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதை ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை, ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17