(இராஜதுரை ஹஷான்)

அரசியல்வாதிகளின் தேவைகளின் காரணமாக போதைப்பொருட்களை பறிமாற்றும் கேந்திர நிலையமாக இலங்கை காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இன்று பாதாள குழுவினரது செயற்பாடுகளும், போதைப்பொருட்களின் வியாபாரமும் பகிரங்கமாக இடம்பெறுகின்றது. கடந்தகால அரசாங்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இக்குற்றங்கள் இன்று அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெறுகின்றது. 

ஆகவே டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டால் தகுந்த தண்டனையை இந்த அரசாங்கம் வழங்கும் என்று சிறிதளவும் நம்பிக்கை கொள்ள முடியாது என்றார்.