இந்திய அணி வீரர் ஜடேஜா - ரீவா சோலங்கி ஆகியோருக்கு திருமணப் பரிசாக 95 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான ஆப - கியூ7 காரை அவரது மாமனார் பரிசளித்துள்ளார்.

இம் மாதம் 17 ஆம் திகதி இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் மெக்கானிக்கல் என்ஜினீயரான ரீவா சோலங்கிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றது.

குறித்த நிச்சயதார்த்தம் ஜடேஜாவுக்குச் சொந்தமான ஹோட்டலில் நடைபெற்றது. 

மெக்கானிக்கல் என்ஜினீயரான ரீவா சோலங்கியின் தாய் பிரஃபுல்லா சோலங்கி, இந்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். அவருடைய தந்தை தொழில் அதிபர் ஆவார்.

ஜடேஜா - ரீவாவுக்குத் திருமணப் பரிசாக ஆடி -  கியூ7 காரை பரிசளித்துள்ளார் ஜடேஜாவின் மாமனார். இந்த கார் 95 லட்சம் இந்திய ரூபா மதிப்பு உடையது. இந்த காரை நேற்று ஷோ ரூமிலிருந்து பெற்றுக்கொண்டார் ஜடேஜா.