பொருளாதார மத்திய நிலைய குழப்பங்களிற்கு முழுக்காரணம் சம்பந்தனே : சிவசக்தி ஆனந்தன்.

Published By: Digital Desk 4

11 Feb, 2019 | 03:33 PM
image

பொருளாதார  மத்திய நிலைய குழப்பங்களிற்கு முழுக்காரணம் சம்பந்தன் ஐயாவே என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்..வவுனியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்படி தெரிவித்தார். 

மேலும் தெரிவித்த அவர்,

பி.எஸ்.எம். சாள்ஸ் வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்தபோது நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுகூட்டத்தில் ஓமந்தை பகுதியிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதாக முடிவெடுக்கபட்டது. பின்னர் சில அரசியல் வாதிகளால் தாண்டிகுளத்தில் அதனை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாக ஓமந்தைக்கு கொண்டு செல்லபட்டால் இஸ்லாமிய சகோதரர்கள் வழிபடுவதற்கு அங்கு பள்ளிகள் இல்லை எனவே தாண்டிகுளம் பண்ணைதான் சரியான இடம் என்பதில் அவர்கள்  பிடியாக நின்றார்கள். அவர்களோடு சேர்ந்து எமது மாகாணசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அது சரி என்று நின்றார்கள். இறுதியில் சம்பந்தர் தலைமையில் இவ்விடயம் ஆராயபட்டு வாக்கெடுப்பிற்கு சென்றது. 

எனினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுத்தமுடிவிற்கு மாறாக வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டாம் என்று நான் அவரிடம் கோரியிருந்தேன். அதனை பொருட்படுத்தாது வாக்கெடுப்பு நடாத்தபட்டு 14 ற்கும் மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் ஓமந்தையில் அமைய வேண்டுமென்று வாக்களித்தார்கள். ஒருசிலரே தாண்டிகுளத்தில் அமையவேண்டும் என்று விரும்பினர். எனினும் சம்மந்தன்  அந்த ஐனநாயக தீர்பிற்கும் மதிப்பளிக்காமையினால் இன்று தமிழ், சிங்கள கிராமங்களை உள்ளடக்கிய எல்லையில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கபட்டுள்ளது. 

குறித்த இடம் காலப்போக்கில் கைமீறி போவதுடன் விவசாயிகளின் நன்மை கருதி  கொண்டுவரப்பட்ட திட்டம் ஒரு கட்சி அரசியலிற்கு ஊடாக குறுகிய செயற்பாட்டால் திசைதிருப்பட்டுள்ளது. இதற்கு முழுகாரணமும் சம்பந்தனயேயேசாரும்.

தற்போது தினச்சந்தை நடாத்துபவர்களில் 14 கடைகளின் உரிமையாளர்கள் குறித்த கடைகளை 15 வருடங்களாக அவர்கள் நடாத்தாமல் குத்தகை அடிப்படையில் வழங்கபட்டிருப்பதாக அறியமுடிகின்றது. உண்மையில் விவாசாயிகள், தோட்ட செய்கையாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் உற்பத்தி பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இது உருவாக்கபட்டது. ஏற்கனவே விவசாயிகளிற்கு சந்தைவாய்ப்புகள் இல்லாத நிலை காணப்படுவதுடன் உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையும் இருக்கிறது. 

எனவே அவர்களிற்கும் கடைகள் ஒதுக்கபட வேண்டும். குறிப்பாக வவுனியாவில் அமைந்துள்ள 8 கமநலசேவை நிலையங்களை மையபடுத்தி குறைந்த பட்சம் தலா 2 கடைகளையாவது ஒதுக்கி வழங்கினால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58