பேராதனை மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களின் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச தரப்படுத்தலுக்கு மேம்படும் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டி யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முன்னணி பல்கலைக்கழங்களை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த புதியதொரு சட்டமூலத்தை உருவாக்கவுள்ளேன். இதற்கென பிரத்தியேகமாக ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளேன். இதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன்.
கண்டி மாவட்டத்திலுள்ள யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பலவகையான பௌதீகவள பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. இல்ல விளையாட்டுப் போட்டி நடாத்துவதற்கு மைதானத்தில் போதியளவு இடவசதிகள் இல்லை. இவற்றை நிவர்த்திக்கவேண்டிய கடைமைப்பாடு எனக்கு இருக்கின்றது. பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு மதில் அமைத்து பரப்பளவை விஸ்தரிக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கென முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளேன். அதன்பின்னர் மேலதிக ஒதுக்கீடுகளைச் செய்து விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருவேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM