மீண்டும் கிண்ணத்த‍ை வெல்லும் வாய்ப்புள்ளது - பொண்டிங்

Published By: Vishnu

11 Feb, 2019 | 11:45 AM
image

அவுஸ்திரேலியா அணி மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உதவிப் பயிற்சியாளருமான ரிக்கிபொண்டிங் தெரிவித்துள்ளார்.

10 அணிகள் பங்கேற்கும் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆர்பமாகவுள்ளது.

இந்தப் போட்டிக்காக அவுஸ்திரேலிய அணியை வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அவுஸ்திரேலிண அணியின் உதவிப் பயிற்சியாளராக ரிக்கிபொண்டீங்கை நியமித்துள்ளது.

இந் நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய  அணி கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, 

கடந்த முறை நாங்கள் உலக கோப்பையை வென்றோம். இந்த முறையும் எங்களால் உலக கோப்பையை நிச்சயம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். 

தற்சமயம் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் திரும்பியதும், எங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்து விடும். 

சுமித்தும், வார்னரும் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள். அனுபவசாலிகள். நெருக்கடியான சூழலை திறம்பட கையாளக்கூடியவர்கள். அவர்கள் வந்ததும் உடனடியாக எங்கள் அணியை மேலும் வலுப்பெறும்.

அத்துடன் உலக கோப்பை போட்டி நடக்கும் இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை, எங்களது ஆட்ட பாணிக்கு சாதகமானது. அதனால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக அவுஸ்திரேலியாவுக்கு இருக்கும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது குறித்து கேட்கிறீர்கள். பொதுவாக, அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். 

அதனால் அது பற்றி எங்களுக்கு அதிகமாக கவலையில்லை. எங்களது கவலை சுமித், வார்னர், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகிய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து ஒருங்கிணைப்பதில் தான் இருக்கிறது. திட்டமிட்டப்படி எல்லாமே சரியாக அமைந்து விட்டால் எங்கள் அணி சவால்மிக்க அணியாக விளங்கும்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58