அட்டன், டிக்கோயா பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரைக்கு அமைவாக ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்றிரவு குறித்த பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் இவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்வு நடவடிக்கைக்காக பயன்படுத்திய பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைதுசெய்யபட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்று திங்கட்கிழமை ஹட்டன் நீதிதமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.