கடந்த வருடம் மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட 2,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் மின் மானிகளில் அளவீடுகளை மாற்றியமைத்தல், சட்டவிரோத மின்சார இணைப்பு போன்ற குற்றங்களும் இவற்றில் அடங்கும்.

இத்தகைய குற்றமிழைத்தவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் மூலம் இலங்கை மின்சார சபை 130 மில்லியன் ரூபா பெறப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.