ஹட்டன் நகரில் உள்ள வியாபார ஸ்தலங்களில் உள்ள பணம் மற்றும் பொருட்களை திருடுவோரை கண்டுபிடிக்க ஹட்டன் பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஹட்டன் நகரில் உள்ள பிரதான வீதியில் கடந்த 5 ஆம் திகதி இரவு 9.40 மணியளவில் வியாபார ஸ்தலங்களை மூடியபின்னர், திருடர்கள் அந்த வர்த்தக நிலையத்தின் கூரை தகட்டை கலற்றி அதன் வழியாக நிலையத்தில் உள்ளே சென்று, உள்ளே உள்ள இரும்பு கதவை திறக்க கடும் முயற்சி செய்த போதும் அது முடியாமல் போய் உள்ளது.

அந்த வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவான போதும் அவர்களது முகம் மற்றும் உடல்களை மறைத்திருந்ததால் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடீயாத நிலை தோன்றியுள்ளது.

ஆகையால் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் வர்த்தக நிலையங்களில் பாதுகாப்பிற்காக பணிப்பரிவோரை நிறுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.