இந்திய அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 212. ஓட்டங்கள‍ை குவித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியை நியூஸிலாந்து அணி 80 ஓட்டங்களினாலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளினாலும் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் இவ் விரு அணிகளுக்கிடையோயான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி எமில்டனில் இன்று ஆரமபமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி முதலில் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் முன்ரோ 72 ஓட்டத்தையும், டிம் சைபெர்ட் 43 ஓட்டத்தையும், வில்லியம்சன் 27 ஓட்டத்தையும், கிரேண்ட்ஹோம் 30 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றறு ஆட்டமிழந்ததுடன், டெய்லர் 14 ஓட்டத்துடனும், டரல் மிச்செல் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார் மற்றும் கலில் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 213 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.