ஆப்கானிஸ்தான், காராபாக் மாவட்டத்தின் ஜமால் கில்  பகுதியில் தலீபான் தீவிரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தலீபான் தளபதி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜமால் கில் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அப் பகுதியில் படையினர் அதிரடியாக வான் தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் தளபதி ரபியுல்லாவும் ஒருவர் என தகவல்களும் உள்ளடங்குகின்றனர்.

எனினும் இந்த தாக்குதல் பற்றி தலீபான்கள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.