வனவாசல பகுதியில் ரயில் ஒன்று டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தால் கொழும்பு மற்றும் ரம்புக்கன பகுதிக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

விபத்தில், ரயில் மிதிபலகையில் தொங்கி கொண்டு சென்ற நால்வர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான  டிப்பர் பாதுகாப்பற்ற கடவையில் சென்றுள்ளமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.