(இராஜதுரை ஹஷான்)

பாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதூஸை மக்கள் விடுதலை முன்னணியினர் உருவாக்கினார்கள் என்று  எதிர்கட்சியினர் சாட்டியுள்ள குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  

மக்கள் விடுதலை முன்னணியினரே பாதாள குழு தலைவன் மாகந்துரே மதூஸை உருவாக்கினார்கள் என்று எதிர்தரப்பினர் சாட்டியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் வினவியபொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள குழுவின் தலைவன் மாந்துரே மதூஸின் விவாரமே இன்று  சமூக மற்றும் அரசியல் தரப்பின் பேசுபொருளாக காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் ஒரு தரப்பினர் பிறிதொரு தரப்பின் மீது முறையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டுவதால் எவ்விதமான நன்மைகளும்  ஏற்படபோவது கிடையாது. 

ஆகவே பாராளுமன்ற  உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே இவ்விடயத்தில் ஒரு தீர்க்கமான தீர்மானத்தை முன்னெடுத்து பாதாள குழுக்களை முற்றாக அழிக்க  செயற்பட வேண்டும் எனவும் இதன்போத அவர் குறிப்பிட்டார்.