மஹியங்கனை - மாதுறு ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 17 பேர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய 04 ட்ரக் வண்டிகள் மற்றும் 02 லொறிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.