ஹைதராபாத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் ”ரோபோ கிச்சன்” எனும் பெயரில் ஹோட்டல் ஒன்று ரோபோக்களை கொண்டு செயல்படுகின்றது.

தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் ஹைதராபாத்தில் ரோபோட்களைக் கொண்டு உணவு பரிமாறும் வகையில் ஹோட்டல் ஒன்று செயல்படுகின்றது.

ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ‘ரோபோ கிச்சன்’ எனும் ஹோட்டல் உள்ளது. அங்கு உணவு பரிமாற ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

குறித்த வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான மெனு கார்ட்க்கு பதிலாக டேப் ஒன்று கொடுக்கப்படும்.

அதில் உணவு வகைகள் மெனு போல் இருக்கும். அதில் தேவையான உணவை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்த பின்னர் அவற்றுக்கான பதிவுகளை நடமாடும் ரோபோ மூலம்  சமையல் அறைக்கு  கொண்டு செல்லப்பட்டு.

குறித்த சமையல் அறையிலிருந்து  உணவு தயாரானதும் அவற்றை குறித்த ரோபோக்களே பரிமாறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

.