பனிப்பொழிவால் உறைந்த நிலையில் இருந்த பூனை ஒன்று  அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த  சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய குளிர் காற்று காரணமாக அங்கு மனிதர்கள் மாத்திரமன்ற விலங்குகளும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றன.

இந்நிலையில், கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறியுள்ளது. பனிப் பொழிவின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரச நிறுவனங்கள் செயலிழந்துள்ளன.

இந்நிலையில், பாடசாலைகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில்அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உறையவைக்கும் கடுங்குளிரால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் பெண் பூனை ஒன்றை வளர்த்து வருகின்றனர்

குறித்த பூனை  பனிப்பொழிவின் தாக்கத்தால் உறைந்துபோன நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது. 

இது கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளது, பின்னர் பூனையின் எஜமானர் தீவிரமாக தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பூனை வீட்டின் அருகில் இருந்த வீதியோரத்தில் பனியினால் முழுவதுமாக மூடப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பூனையை உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டு பூனையின் உடலில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு, உடல் வெப்பத்தை அதிகரித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதனால் பூனையின் உயிர் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.