(ஆர்.விதுஷா)

தொம்பே பகுதியில்  இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபரொருவர்  கைது  செய்யப்பட்டுள்ளார். 

தொம்பே - வனலுவாவ  - வடக்கு பகுதியில்  நேற்று   பிற்பகல்  2.30 மணியளவில்   மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு  சம்பவத்தின்  போது    23 வயதுடைய  வானலுவாவ  வடக்கு , வானலுவாவ  பகுதியை சேர்ந்த கணவன் மனைவி  இருவரும்      படுகாயமடைந்துள்ள  நிலையில்  தொம்பே  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில்  மனைவியின்  கால்  பகுதியிலும்  ,  கணவனின்  முகத்திலும்  துப்பாக்கி சூட்டு காயங்கள்  ஏற்பட்டுள்ள நிலையில்   அவர்கள்  இருவருக்கும்   தொடர்  சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.  

இந்த நிலையில் தொம்பே பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்ட விசேட  நடவடிக்கைக்கு  அமைய சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபரொருவர்  இன்று சனிக்கிழமை  அதிகாலை  1.30 மணியளவில்  கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்  55 வயதுடைய  கொட்டவத்தை  பகுதியை சேர்ந்த  தர்மசேன  எனப்படுபவரென விசாரணைகளின்  போது தெரிய வந்துள்ளது.