புற்றுநோயாளர் தினத்தை முன்னிட்டு மாபெரும் புற்று நோய் விழிப்புணர்வு பேரணி ஒன்று வடமராட்சியில்  இன்று சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றது.

காலை 6.30 மணியளவில் நெல்லியடி செலான் வங்கியிலிருத்து ஆரம்பமான இவ் விழிப்புணர்வு பேரணி பிரதான வீதிவழியாக சென்று பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் நிறைவடைந்ததையடுத்து அங்கு விழிப்புணர்வு கருத்தரங்குகள் இடம்பெற்றன. 

செலான் வங்கியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு பேரணிக்கு வடமராட்சி வலயக்கல்வி அலுவலகமும்,  பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையினரும் தமது அனுசரணையினை வழங்கினர்.