மீனவர் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத கொடுக்கல் வாங்கல், வெளிநாடுகளுக்கு செல்வது ஆகியவற்றை தடுப்பதற்காக அடையாள அட்டை மற்றும் அனைத்து மீன்பிடி வள்ளங்களுக்கும் ஜி. பி .எஸ். தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

கடற்தொழில் திணைக்கள பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது இதனை அமைச்சர் தெரிவித்தார்.

 கடற்தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடற்தொழில் துறைமுகங்களில் இருந்து செல்லும் கடற்தொழிலாளர்களின் கைவிரல் இயந்திரத்தில் தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்தப்பின்னர் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அவசர அறிவிப்பு காலநிலை அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கும் குறுந் தகவல்களை பரிமாறுவதற்கும் 2 மாத காலப்பகுதிக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர். 

இதற்கான பரிந்துரை 2019ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.