வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். 

இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

 அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் அந்த நாடுகளுடன் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். இதற்கிடையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசூலா மக்களுக்கு தேவையான உதவி பொருட்களை வழங்க முன்வந்துள்ளன.

இந்நிலையில, வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கும் அதிபர் நிகோலஸ் மதுரோ வெனிசூலா எல்லை பகுதிகளை மூடிவிட்டார்.

 இதனால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உதவி பொருட்களை ஏற்றி வந்த லொறிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

உதவி பொருட்கள் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வெனிசூலா மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.