(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொது பல சேனாவின் பொதுச் செயளாலர் கலகொட அத்தே ஞானசார  தேரர், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்யா எக்னெலிகொடவை நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய விவகாரத்தில் குற்றவாளியே என  ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்று அரிவித்தது.

இது தொடர்பில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த மேல் நீதிமன்றம், நீதவான் வழங்கிய 6 மாத கால சிறைத் தண்டனையை மட்டும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்தது. ஞானசார தேரர், நீதவான் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த மேன் முறையீட்டின் மீது இன்று தீர்ப்பளித்தே ஹோமாகம மேல் நீதிமன்றின் நீதிபதி  அமல் திலகரத்ன இதனை அறிவித்தார்.