2016ம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச்சட்டத்தின் செயலாக்கத்தில் இரண்டு வருடத்தை கடந்துள்ள நிலையில், வெளிமாகாணங்களில் பொதுமக்கள் அமர்வினையும் மேன்முறையீட்டு விசாரணையையும் ஆரம்பித்துள்ளது என்பதனை அறிவிப்பதில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு மகிழ்ச்சியடைகின்றது.
19 ஆம் திகதி ஜனவரி மாதம் 2019ம் ஆண்டு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது முதலாவது பொதுமக்கள் அமர்வினையும் மேன்முறையீட்டு விசாரணையையும் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் பானம எனும் இடத்தில் நடாத்தியது.
இதில் அம்பாறை அரசாங்க அதிபர், லகுகல, சியம்பலாண்டுவ, தமன மற்றும் பொத்துவிலின் பிரதேச செயலாளர்கள் மற்றும் அவர்களுடைய அலுவலக ஊழியர்கள், பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இவ்வமர்வில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தவிசாளர், ஆணையாளர்கள், பணிப்பாளர் நாயகம் அதுபோல அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் உரையாற்றினர்.
கலந்துரையாடல் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டது. அதில் தகவல் உரிமைக்கான நடபடிமுறையின் வெற்றி; அதன் சவால்கள் கலந்துரையாடப்பட்டது.
மேலும் கிராமத்தவர்கள் தமது சமூகத்தினரின்; உரிமைகளை பெற்றுக்கொள்ள தகவல் உரிமைச் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்ற விடயத்திலும் கவனஞ் செலுத்பப்பட்டது. தகவல்களைப் பெறுவதிலுள்ள தடைகள் அதாவது அரசாங்க அலுவலகங்களிலுள்ள தாமதம், அதிகாரத்துவ நடவடிக்கைகள் மற்றும் சில அதிகாரிகளின் விரோத போக்குகள் என்பனவும் விரிவாக ஆராயப்பட்டன.
அதன் பின்னர் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு; மேன்முறையீட்டு விசாரணையை நடாத்தியது. குறித்த மேன்முறையீடுகள் இரு தரப்பினர்களின்; திருப்தியுடன் தீர்த்து வைக்கக்பட்டன.
மேலும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு இக் கூட்டத்தில் மும் மொழிகளிலுமான இரண்டு வெளியீடுகளை பங்கேற்பாளர்களுக்கிடையில் வெளியிட்டிருந்தது. இவ்விரு வெளியீடுகளும் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் ( www.rticommission.lk ) இப்போது பதிவேற்றப்பட்டுள்ளது. முதலாவது வெளியீடு 2017 தொடக்கம் 2018ம் ஆண்டு காலப்பகுதியில் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சில முக்கியமான ஆணைகளையும் அதில் அடங்கிய முக்கிய மூலக் கோட்பாடுகள் விளக்கக் குறிப்புக்கள் முதலியவற்றை கொண்டுள்ளது. ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பல வித ஆணைகளின் அட்டவணையையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களை வழங்கும்போது, ஆணைக்குழு தனிப்பட்ட நபர்களை விட அரசிற்கு அதிகளவான வளங்களும் அதிகாரமும் இருப்பதாக கருதுகின்ற சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவானது பகிரங்க அதிகாரசபைக்கும் மேன்முறையீட்டாளருக்கும் இடையில் நேர்மைத்தத்துவங்களை பேணுவதில் அக்கறை காட்டியுள்ளது. இரண்டாவது வெளியீடானது சட்டத்துறை, ஊடகம் பொதுச்சேவை மற்றும் கல்வித்துறையில் முக்கிய பங்குவகிக்கும் முக்கிய பங்காளர்களால் இலங்கையின் தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் பிரதிபலிப்புக்கள் மற்றும் தகவலுக்கான உரிமையின் செயற்பாட்டுமுறை பற்றியவோர் கட்டுரைத் தொகுப்பாகும் ஆணைக்குழுவின் பொதுமக்கள் அமர்வினை நடத்துவதற்கு அம்பாறை முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் அமர்வினதும் மேன்முறையீட்டு அமர்வினதும் தொடர்ச்சியை வருகின்ற மாதங்களில் நடத்துவதற்கு ஹட்டன் மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ ஆகிய மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களும் தகவல் உரிமைச்சட்டத்தின் பயன்களை அனுபவித்தலின் அவசியத்தை கருத்தில் கொண்டு இவ் மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தகவல் உரிமைக்கான ஆணைக்குழுவானது தகவல் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தும் சுமூக உறவு மற்றும் இணக்கமான செயல்முறை தொடர்பில் சமூகத்திற்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் உரையாடல்களை தொடங்கி வைப்பதில் ஒரு செயலாக்குனராக செயற்படுகின்றது.
இந்த ஆணைக்குழுவின் முதலாவது பொது அறிக்கை 10 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மனிதவள மற்றும் நிதி பற்றாக்குறை தொடர்பில் மட்டுப்பாடுகள் இருந்த போதிலும், ஆணைக்குழுவானது காத்திரமான, சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆணைக்குழு அங்கத்தவரின் நிபுணத்துவம் ஆளுமை மற்றும் ஏனைய ஆணைக்குழு அலுவலரின் பங்களிப்புடன் தகவல்களை நாடுபவர்களுக்கிடையே காத்திரமான ஒரு நடைமுறை வழக்கை ஸ்தாபிக்க உறுதியெடுத்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். இவையாவும் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சிக்கல்களை எதிர்கொண்டபோதிலும் உண்மையாக இருக்க முயற்சித்திருக்கின்றோம் என்ற வாக்குறுதியாகும்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியளிவில் ஆணைக்குழுவின் முன்னிலையில் 1030 மேன்முறையீடுகள் இருந்தன. அவற்றில் 654 மேன்முறையீடுகள் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன. நிலுவையிலுள்ள மேன்முறையீடுகளில், பெரும்பான்மையான வழக்குகளில் ஆணைக்குழுவானது தகவல்களை வெளியிடும் நிலையில் இடைக்கால கட்டளைகளை வழங்கியுள்ளது. செயற்பாட்டு ஆரம்பகாலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கோட்பாடுகளை உருவாக்குவதற்கான அவசியத்தை ஆணைக்குழு உணர்ந்திருந்ததால் அதன் தீர்மானங்கள் மக்களின் பொதுநலனையும் தகவல் வெளிப்படுத்துவதற்குரிய கோட்பாடுகளையும் பாரியளவில் பிரதிபலித்திருந்தன.
பொது மக்களின் பொதுநலன் மேலோங்க வேண்டும் எனும் விடயம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் எனெனில் ஆணைக்குழு நியதிச்சட்டத்தினூடாக இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பொதுச் சேவையானது ஒரு “தகவல்-மூடிய” கலாசாரத்திலிருந்து “தகவல்-திறந்த” கலாசாரத்திற்கு மெதுவாக மாற்றமடைந்து வருகின்ற அதே நேரம் சவால்கள் பலவற்றையும் எதிர்கொள்கின்றது. தகவல் வழங்குவதிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கடமை பொது அதிகாரிகளால் மிகவும் கவனமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். மேலும் புதிய சட்டங்களின் உருவாக்கமானது தகவல் உரிமைக்கான அதிகார எல்லைக்கு அப்பால் உள்ளது கவனின்கப்பட வேண்டியதொன்றாகும். ஆயினும், பாராட்டத்தக்க ஆர்வத்துடன் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள மக்கள் அவர்களுடைய தகவல் அறியும் உரிமையை பயன்படுத்துவதிலுள்ள ஆர்வம் மற்றும் அவர்களுடைய ஆதரவு என்பன எங்களுக்கு ஊக்கமளிக்கும் விடயமாக அமைந்துள்ளது.
ஒரு சட்டத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைக்கான கலாசாரத்தை உருவாக்குவதற்கான மேலதிக அபிவிருத்திகள் இலங்கையில் பதினான்கு ஆண்டு காலம் நீடித்தது. இந்த நேர்மறையான நம்பிக்கையுடைய நன்மையான போக்குகள் தொடரும் என்று நாம் நம்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM