அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் விஷ்ணுகாந்திற்கு  ஒதுக்கப்பட்ட நிதியில் பாடசாலை உபகரணங்கள் ஒரு தொகுதியான 1000 பாடப்புத்தகங்கள் கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் சின்னத்தம்பி பாஸ்கரா, மஞ்சுளா ராஜேந்திரன் , பாலசுரேஷ்குமார், பாடசாலை அதிபர் திருமதி ஜெயராஜா மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின்  அமைப்பாளர்கள் செந்தில்குமார்,சந்திரகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.