ராஜ்கமல் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் அம்மா நானா ஆட்டா என்ற தெலுங்கு படத்தில் உலக நாயகன் கமல் நடிக்கவுள்ளார். 

இப்படம் 4 மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்புக்கு அம்மா அப்பா விளையாட்டு என்று பெயரிட உள்ளனர்.
இந்தப் படத்தை, கமலை வைத்து மலையாளத்தில் சாணக்கியன் படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார் இயக்குகிறார். கமலுடன் அமலா, இந்தி நடிகை ஜரீனா ஆகியோர் நடிக்கின்றனர். அமெரிக்காவில் படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்க கமல் திட்டமிட்டுள்ளார்.