தென்னமெரிக்க நாடான  வெனிசுலாவில்  ஏற்பட்டிருக்கும்  அரசியல் நெருக்கடியில்  அமெரிக்கா  தலையிடுவதைக்கண்டித்து  கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக  இன்று வெள்ளிக்கிழமை   மக்கள் விடுதலை  முன்னணியினர்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலங்துகொண்ட  மக்கள் விடுதலை  முன்னணியின்  ஆதரவாளர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெனிசுலாவின் மீது  கை வைக்காதே ,  வெனிசியூலா  மக்களே, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உங்கள் போராட்டத்திற்கு  இலங்கை மக்களின் வாழ்த்துக்கள்,  வெனிசியூலாவிற்கு எதிரான ஏகாதிபத்திய தலையீட்டை  தோற்பகடிப்போம்  என்ற  பதாகைகளை ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பிய வாறும் போராட்டத்தில்  பங்கு  பற்றினர். 

போராட்டத்தின்  இறுதியில் கருத்துத் தெரிவித்த  மக்கள் விடுதலை முன்னணியின்  பொது  செயலாளர்  டில்வின் சில்வா, வெனிசியூலா மக்கள்  தேர்தலின் ஊடாக தாம்  தேர்வு  செய்த  ஜனாதிபதியை  நீக்கி  அந்நாட்டின்   இடைக்கால  ஜனாதிபதியாக எதிர்க்கட்சி தலைவர்  குவாய்டோவுக்கு தன்னைத்தானே  பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தநிலையில், வெனிசுலாவின்  ஜனாதிபதி  நிகொலஸ் மதுரே  தானே அந்த நாட்டின் நியாயஷ்தம்  செய்யக்கூடிய ஜனாதிபதி  என வாதிட்டு வருகின்றார். இத்தகைய செயலுக்கு  அமெரிக்கா தனது ஆதரவை  வழங்கியுள்ளது.  

இது  முற்றுமுழுதாக கண்டிக்க வேண்டிய விடயமாகும்.  அமெரிக்காவின்  தலையீடானது வெனிசுலா  மக்களின்   ஜனநாயக ரீதியான தீர்மானங்களுக்கு  பங்கம் விளைவிப்பதாகவும் , நாட்டின் சுதந்திரத்தன்மையை பாதிப்படைய செய்யக்கூடிய விடயமாகவும்  அமையப்பெற்றுள்ளது.  

அமெரிக்கா   தன்னாதிக்கம்  மிக்க நாடாக தன்னை  அடையாளப்படுத்திக்கொள்வதுடன், ஏனைய நாடுகளின்  சுதந்திரத்திலும் தலையிடுவதென்பது  ஏற்றுக்கொள்ள முடியாத  விடயமாகும். இவ்வாறாகவே , ஆப்பானிஸ்தான்  ,  கொரியா  போன்ற நாடுகளின்  பிரச்சினைகளிலும் அமெரிக்கா தனது  தலையீட்டை  மேற்கொண்டுள்ளது. 

இவ்வாறான நிலை எமது நாட்டிற்கும்  ஏற்படுவதற்கு  முன்னதாக  மேற்படி  ஜனநாயகத்திற்கு  எதிரான செயலை  தோற்கடிக்க  வேண்டும் என்றார்.