கேகாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று இரவு 7 மணியளவில் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேரகொட பேலிகலை துணைவீதியில் ,வேரகொடயை நோக்கி சென்ற கார் டிரக்டர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதுடன், விபத்தில் டிரக்டர் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.

களுகலை பேலிகலை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் காரின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன், காரையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.