நுவரெலியா பகுதியில் விசா அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று  பிற்பகல் 1 மணியளவில் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலந்தைப் பகுதி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்குப் புறம்பாக இந்நாட்டில் தங்கியிருந்த இந்திய நாட்டுப் பிரஜைகள் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதன்போதே 24, 28, 29, 32, 42 ஆகிய வயதுகளுடைய இந்தியப் பிரஜைகளே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசார் இவர்களை இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.