கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே நாட்டின்  எதிர்காலம் தங்கியுள்ளது - அமைச்சர் சாகல

Published By: Daya

08 Feb, 2019 | 03:02 PM
image

(செய்திப் பிரிவு)

கிரமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளமையால் அந்தப் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென  துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்  சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 

பிரதம அமைச்சர் அலுவலக பிரதானி , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்,  மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்னாயக்க  பல்லேகம  பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக  இன்று வெள்ளிக்கிழமை  கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, 

கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே எம் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. அப்பாடசாலைகளை அபிவிருத்திசெய்ய வேண்டும். இப்பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும். கல்வியுடன் விளையாட்டிலும் ஈடுபட்டு இப்பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

இவ்வாறானதோர் நிகழ்வினை ஏற்பாடுசெய்த அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகள்.

பல்லேகம பாடசாலை நீண்ட காலமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்கின்ற பாடசாலையாகும். இப்பாடசாலை ஒரு சிறு நிலப்பரப்பில் அமைந்துள்ளமையால் அங்கு கல்வி பயில்கின்ற மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வது கடினமாக உள்ளது. 

இப்பாடசாலையை “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கி பாடசாலைக்கு தேவையான புதிய கட்டடங்களை நிர்மாணித்து, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்திச் செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58