பாரிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்குள் இருந்து வெளியேறியதால் கொழும்பின் சில பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புத் துறைமுகத்திற்குள்ளிருந்து அதிகளவிலான கொள்கலன் பாரவூர்திகள் வெளியேறியுள்ளதால் கொழும்பின் பேலியாகொடை, இங்குறுகொட சந்திப் பகுதி, சுகததாச விளையாட்டரங்கை அண்மித்த பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.