உலகின் மிகப்பெரிய விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எல்லைக்குள் குறித்த விமானத்தை செலுத்திகொண்டிருந்த போது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். 

அபுதாபியிலிருந்து அவுதிஸ்ரேலியா சிட்னியை நோக்கிப் பயணித்த விமானமே இன்று காலை 6.10 மணியளில்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த விமானத்தின் விமானி கட்டுநாயக்கா விமான நிலைய வைத்தியஅதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலைய வாகனத்தின் மூலம் குறித்த விமானி நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

குறித்த விமானத்தில் 443 பயணிகள் மற்றும் 21 விமான சிப்பந்திகள் பயணித்துள்ளனர்.  

இந்நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமான நிலையத்தின் அருகிலுள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.